தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை கட்சியின் தலைவரான நடிகர் விஜய் அறிமுகம் செய்து கொடியேற்றி வைத்தார்.
அறிமுக நிகழ்வு பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்றது.
சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.