புத்தளம், கற்பிட்டி – அல்மனார் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் நேற்று (21) காட்டுப்பகுதியில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
37 வயதுடைய எம்.ஆர்.எம்.பஸால் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவரின் தாய் மற்றும் உறவினர்கள் அவரைத் தேடிய நிலையில் காட்டுப்பகுதியில் மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், சடலமாக மீட்கப்பட்டவரின் இரண்டு கைகளும் கட்டப்பட்டிருந்ததாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.