டபுள்யூ டபுள்யூ இ (WWE) எனப்படும் உலக மல்யுத்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்த ரே மிஸ்டீரியோ உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் தனது 66 வது வயதில் உயிரிழந்துள்ளார். இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். 90ஸ் கிட்ஸ் மனதில் ரே மிஸ்டீரியோவுக்கென தனி இடமுண்டு.
ரே மிஸ்டீரியோ என்றாலே அவரின் முகமூடி தான் நியாபகம் வரும். இந்நிலையில், ரே மிஸ்டீரியோ நேற்று (20) உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்பு குறித்து அவரின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இருப்பினும், ரே மிஸ்டீரியோவின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் இதுவரை வெளியாகிவில்லை.
ரே மிஸ்டீரியோவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.