இந்தியாவின் – மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து இன்று (17) இடம்பெற்றுள்ளது.
டார்ஜிலிங் புகையிரதம் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடுகதி புகையிரதத்துடன் எதிரே வந்த தபால் புகையிரதம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்தில் 8 பேர் பலியாகியதோடு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிறுத்திவைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.