வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காதலிக்காக தனது வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த இளைஞனின் தந்தை தனது வீட்டில் இருந்த அலமாரி, கட்டில், நாற்காலிகள் உட்பட அனைத்து பொருட்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில், முறைப்பாட்டாளரின் மகன் எழுதிய கடிதம் ஒன்று வீட்டில் இருந்த நிலையில், அதனை பொலிஸார் எடுத்துள்ளனர்.
தந்தையின் முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரான மகன் கைது செய்யப்பட்டதுடன்,
திருடப்பட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. தந்தையின் வீட்டில் ஒரு பழைய மெத்தையை மட்டும் விட்டுவிட்டு மற்ற பொருட்களையெல்லாம் ஒரு லொரியில் ஏற்றிச் சென்றமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.