இந்திய 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை புதிய பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் பதவி ஏற்கவுள்ளார்.
இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரவு 7:15 மணிக்கு
பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு , சிசல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அபிப், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே உள்ளிட்ட 7 அயல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.