கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மங்கலகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர்த் திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்றுமுன்தினம் (07) இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.
ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் கேகாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.