யாழ்ப்பாணம் – அரியாலை கில்லாடிகள் – 100 அணியினரால் நடத்தப்பட்டு வரும் AKSL பிறிமீயர் லீக்கின் மூன்றாவது பருவகாலத்திற்கான போட்டிகள் நேற்று (01) ஆரம்பமாகியது.
ஆரம்பநிகழ்வுகள் குகதாஸ் தலைமையில் நேற்று காலை 8.30 மணியளவில் அரியாலை சரஸ்வதி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் குழுமத் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் கலந்து சிறப்பித்தார்.
குறித்த தொடரில் பத்து அணிகள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.