ஊரெழு மேற்கு புண்ணியப்புலம் நாகதம்பிரான் திருக்கோவில் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (30) கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமாகியது.
அலங்கார உற்சவமானது குரோதி வருடம் சித்திரைத்திங்கள் 18 ஆம் நாள் நேற்று (30) காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ச்சியாக 12 நாட்கள் உற்சவம் இடம்பெறவுள்ளது.
ஆலய உற்சவகுரு சிவச்சாரிய இளஞ்சுடர் சிவஶ்ரீ.ந.கஜனேசக்குருக்களினால் விசேட பூசைகள், ஆராதனைகள் சிறப்பாக மேற்க்கொள்ளப்பட்டன.
அத்துடன், இன்று இரண்டாம் நாள் பூசைகள் மாலை வேளையில் சிறப்பாக இடம்பெறவுள்ளமையால் அடியவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தந்து நாகதம்பிரானின் அருளாசிகளை பெற்றுயிருமாறு ஆலய நிர்வாக சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.