யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில், காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஜென்சியா சிவசூரியன் என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர். குறித்த பெண் நேற்றுமுன்தினம் இரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார்.
எனினும் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலைலயில், சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.