யாழ்ப்பாணத்தில் இன்று (21) ஏற்பட்ட சூறாவளி காரணமாக குருநகர் பகுதியில் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டிடத்தின் கூரை பறந்து சேதமடைந்தது.
குறித்த அனர்த்தம் காரணமாக மூன்று குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டன.