பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா இன்று (21) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.