நாட்டைவிட்டு1300 வைத்தியர்கள் வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று(17) விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலங்கையில் 24,000 பேர் அரச வைத்தியர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் 3500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ள நிலையில் அவர்களுக்கான வைத்தியர் நியமனங்களை வெகுவிரைவில் வழங்கவுள்ளோம்.
எனினும் தற்பொழுது துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள் நட்டைவிட்டு வெளியேறுகின்றமை பெரும் பிரச்சனையாக காணப்படுகின்றது என்று மேலும் குறிப்பிட்டார்.