யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களுடைய மூன்று படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று,
யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.