14 வயதுச்சிறுமியை பாலியல் துஷ்பிரளோகம் மேற்க்கொண்ட 22 வயதுடைய இளைஞனும், அவருடைய தாயாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த இருவரையும் நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றிருப்பதால் சிறுமி, உறவினரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சம்பவதினமான நேற்று சிறுமியை அடைத்து வைத்து தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டிலும் அவரது தாயை அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டிலும் பொலிஸார் கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.