கொழும்பு துறைமுகத்திற்கு துருக்கிய போர்க்கப்பல் ஒன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக வந்தடைந்துள்ளது
துருக்கிய கடற்படையின் டி.சி.ஜி கினாலியாடா என்ற இந்த கப்பல் 152 மாலுமிகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.