2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக ஸ்பெயின் தகுதிப்பெற்றுள்ளது.
பலம் வாய்ந்த பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
Allianz Arena மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் எட்டாவது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணியினர் கோல் அடித்து ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்நிலையில், 21வது நிமிடத்திற்கு பிறகு போட்டியின் போக்கு முற்றிலும் ஸ்பெயின் வசம் சென்றது.
இம்முறை யூரோ கிண்ணத்தில் எண்ணற்ற சாதனைகளை தன் பெயரில் சேர்த்த ஸ்பெயின் அணியின் பையன் யமல், 21வது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோலை பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து 25வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் டானி ஓல்மோ மற்றுமொரு கோலை அடிக்க போட்டியின் முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்பெற்றது.
எனினும், பிரான்ஸ் அணியினர் கோல் அடிப்பதற்கு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது.
இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.