திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 96 ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (10)அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சாரதி, நடத்துனர் உட்பட பயணிகள் பலரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.