திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று(09) காலை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.