சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் அத்தியட்சகராக இன்று (09) காலை கோபாலமூர்த்தி ரஜீவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகராக இராமநாதன் அர்ச்சுனா கடந்த மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் நடந்த ஊழல் மோசடிகள், மற்றும் பல முறைகேடுகளை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.
இதன் காரணமாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கும் வைத்தியசாலையில் பணிபுரிகின்ற வைத்தியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியது.
இதனையடுத்து, வைத்தியர் அர்ச்சுனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட செல்வாக்கு காரணமாக வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் என போராட்டம் நடத்தியிருந்தனர்.
நேற்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைப் பகுதியில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்த கொழும்புக்கு வருமாறு வைத்தியர் அர்ச்சுனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியிருந்தார்.
இந்நிலையிலேயே, வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பதில் வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.