புத்தளம் – மாரவில பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்கினை விற்பனை செய்ய முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தம் அடிப்படையில் குறித்த நபரிடம் வலம்புரிச்சங்கை வாங்கும் நோக்கில் சென்று அவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட வலம்புரிச் சங்கு சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியென வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.