அனுராதபுரம் – தலாவ பகுதியில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றை சோதனை செய்த தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சிலர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய சந்தேகநபர் உட்பட ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.