மறைந்த தமிழரசுகட்சியின் பெருந்தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று வியாழக்கிழமை (04) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சம்பந்தனின் பூதவுடல், யாழில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.