அச்சுவேலி மதுபான நிலையத்துக்கு அருகில் பெண் ஒருவரால் நடாத்தப்படும் வண்டில் கடையில் விற்பனை செய்யப்பட்ட குடல் கறியில் சாணி காணப்பட்டதனால் அதனை உட்கொண்ட மூவர் ஒவ்வாமைக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த கடையினை பெண் ஒருவர் நடத்தி வருகின்றார். நேற்று (03) இரவு உணவுக்காக இளைஞர்கள் சிலர் குறித்த வண்டில் கடையில் குடல் கறியினை வாங்கியுள்ளனர். குடல் கறியில் ஒரு வகை துர்நாற்றம் வீசியதுடன் அதனை உட்கொண்ட மூவர் ஒவ்வாமைக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் சுகாதாரத் தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.