முல்லைத்தீவு – முள்ளியவளை மாமூலை நெடுங்கேணி வீதியில் நேற்று (03) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் மாமூலை முள்ளியவளையை சேர்ந்த வரதராஜா டிக்சலா எனும் ஒன்பது வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளையில் இருந்து நெடுங்கேணி நோக்கி பயணித்த பட்டா வாகனத்தில் மோதுண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் உள்ள முந்திரிகை தோட்டத்திலிருந்து வீதிக்கு வரும்போதே குறித்த சிறுமியை வீதியில் வேகமாக பயணித்த பட்டா வாகனம் மோதியுள்ளது.
பட்டா வாகனத்தை செலுத்தி வந்த தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்த 18 வயதான சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.