கண்டி – பன்வில பகுதியில் 5 மாணவிகளை மூன்று இளைஞர்கள் தடுத்து வைத்து அச்சுறுத்தியமையால் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் புலமை பரிசில் பரீட்சை செயலமர்வில் கலந்துகொண்ட 5 மாணவிகள் செயலமர்வு நிறைவடைந்த நிலையில், வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது 17 வயது மதிக்கத்தக்க 3 பேர், மாணவிகளை இடைமறித்து தடுத்து வைத்துள்ளனர்.
மாணவிகள் வீடு திரும்பாததை அடுத்து, மாணவி ஒருவரின் தந்தை தேடி சென்ற போது, மாணவிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானித்து இளைஞர்களிடமிருந்து மாணவிகளை மீட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று இளைஞர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.