காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டை வாங்குவதற்காக விகாரைக்கு சொந்தமான காணிக்கை பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் மாணவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 07, பௌத்தாலோக மகா விகாரைக்கு சொந்தமான காணிக்கை பணத்திலிருந்து குறித்த மாணவர் 130 ரூபாவை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த 14 வயது மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.