வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இரவு எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.
எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகி்ச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.