வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா உடான காட்டுப்பாதை இன்று அதிகாலை (30) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முன்னிலையில் காலை 6.00 மணியளவில் பாதை திறக்கப்பட்டது.
இம் முறை காட்டுப்பாதையூடாக சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதிர்காம கொடியேற்றம் எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.