கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த விஷம் கலந்த பானத்தினை குடித்து உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், படகில் இருந்த இரண்டு மீனவர்கள் சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.
கடந்த 4ஆம் திகதி தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டெவோன் 5 என பெயரிடப்பட்ட பலநாள் மீன்பிடிக் கப்பல் பயணித்துள்ளது.
அம்பலாந்தோட்டை, பள்ளிக்ககுடாவ, பெலியஅத்த, மாத்தறை பிரதேசங்களைச் சேர்ந்த 42 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு மீனவர்களே அதில் பயணித்துள்ளனர்.
தங்காலை கடற்கரையில் இருந்து 350 கடல் மைல் தொலைவில் கடல் நீரில் போத்தல் ஒன்று மிதப்பதை கண்டு அதை எடுத்து மது என நினைத்து குடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.