மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (29) இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் – வான் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் செங்கலடி சேனைக்குடியிருப்பை சேர்ந்த 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையா உயிரிழந்துள்ளார் .
வானின் சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.