நாட்டில் இன்று (30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டண குறைப்பு நடைமுறைக்கு வரும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இன்று (30) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்தார். இதன்படி, பேருந்து கட்டணம் ஐந்து வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.