யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் சிறுவன் ஒருவர் குடல் அலர்ஜி நோயினால் நேற்று (23) உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனுக்கு நேற்றுமுன்தினம் 21 ஆம் திகதியில் இருந்து வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவன் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனையில் குடல் அலேர்ஜி நோயினால் குறித்த மரணம் சம்பவித்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.