அனுராதபுரம் – தலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம்-பதெனிய பிரதான வீதியின் தலாவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரத்தினபுரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்தும், அனுராதபுரம் பகுதியில் இருந்து வந்த முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளாகியுள்ளன.