முல்லைத்தீவு -முத்தையன் கட்டுப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று (17) உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் காயமடைந்த 27 வயதுடைய சிறீஸ்கந்தராசா அரவிந்தன் என்பவரே
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முத்தையன்கட்டுப் பகுதியில் கூலி வேலை செய்து வந்த குறித்த குடும்பஸ்தர் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை 17 வயதுடைய இளைஞன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார்.
குறித் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.