கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நெத்தலியாற்று பாலத்திற்கருகில் உள்ள ஆற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
புளியம்பொக்கணை முசிலம்பிட்டியைச்சேர்ந்த 27வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனே சடலமாக காணப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்திற்கான காரணங்கள் இதுவரை தெரிய வராத நிலையில், குறித்த சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,
தர்மபுரம் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.