இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் எல்லைதாண்டி அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு இந்திய மீனவர்களை கைதுசெய்ததுடன், அவர்களுடைய படகினையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், கைதான மீனவர்கள் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.