யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த மே மாதம் 12ம் திகதி தப்பியோடிய கைதியொருவர் கிளிநொச்சி பகுதியில் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது குறித்த நபர் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட போது குறித்த நபரிடமிருந்து 3,800 கிராம் ஜஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கபட்டுள்ளார்.