சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ். குமாரசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் ரஜரட்ட விவசாயிகள் மாநாடு நேற்று (16) பிற்பகல் அனுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதன்போதே அவர் சஜித் முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.