முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த தாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (12) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய பெண் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டமையை தொடர்ந்து குறித்த தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.