கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் சிகிச்சைக்காக தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாவல் மரம் ஒன்றில் காணப்பட்ட குளவி கூடு இன்று (16) பருந்து தாக்குக்கத்துக்கு இலக்காகிய நிலையில் கலைந்து சென்று மாணவர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 18 மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் நான்கு ஆசிரியர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகி அதில் மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.