யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோ கேரள கஞ்சா இன்று (13) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் சிறப்பு அதிரடி படையினர் இணைந்து தாளையடி பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்க்கொண்டனர்.