ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில், நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இலவச உணவு வழங்கப்படும் என எதிர்க்கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று (12) யா/ சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் ஆயிரத்து 200 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். 3 மாணவர்கள் மருத்துவத்துக்கும், 2 மாணவர்கள் பொறியியல் பீடத்துக்கும், 5 மாணவர்கள் முகாமைத்துவ பீடத்துக்கும் தெரிவாகியுள்ளார்கள்.
விக்ரோரியாக் கல்லூரிக்கு நான் வழங்கிய பேருந்தோடு பாடசாலைகளுக்கு நான் வழங்கிய பேருந்துகளின் எண்ணிக்கை 88 ஆக உள்ளது.
சிலர் எனது இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஏனென்றால் அவர்களால் இதைச் செயற்படுத்தமுடியாது.
இலங்கையின் வரலாற்றில் எதிர்கட்சியால் நாடு அபிவிருத்தி செய்யபட்டமை எமது காலத்திலேயே ஆகும்.
அதேவேளை, எனது ஆட்சியில் நாட்டிலுள்ள 10ஆயிரத்து 906 பாடசாலைகளுக்கும் இலவச உணவை வழங்குவேன்” என்றார்.