ஐரோப்பிய கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் 17வது தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஜேர்மனியில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த தொடரில் 24 நாடுகள் பங்குபற்றவுள்ளன. இறுதி தொடரில் சாம்பியன் பட்டத்தை இத்தாலி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி முனிச் கால்பந்து அரங்கில் ஜெர்மனி ஸ்காட்லாந்து நாடுகள் மோதவுள்ளன.
குழு நிலை போட்டிகள் ஜூன் 26 ஆம் திகதி வரையும் நடைபெற்று நொக் அவுட் சுற்றுக்கள் ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இறுதிப் போட்டி ஜூலை 14 ஆம் திகதி பெர்லினில் உள்ள ஒலிம்பியாஸ்டேடியனில் நடைபெறவுள்ளது.
இருபத்து நான்கு நாடுகள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. மொத்தம் 51 போட்டிகள் நடைபெறவுள்ளது.
குறூப் A யில் ஜேர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும், குறூப் B யில் ஸ்பெயின், குரோஷியா, இத்தாலி, அல்பேனியா ஆகிய நாடுகள் இடம்பிடிக்கின்றன.
குறூப் C யில் ஸ்லோவேனியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும்,
குறூப் D யில் போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.
குறூப் Eயில் பெல்ஜியம், ஸ்லோவாக்கியா, ருமேனியா, உக்ரைன் ஆகிய நாடுகளும்,
குறூப் F இல் துருக்கி, ஜார்ஜியா, போர்த்துகல், செக் குடியரசு ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன.