வவுனியாவில் போதைப்பொருட்களின் பாவணை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் “மாவா” எனப்படும் போதை கலந்த பாக்கு விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கி இருந்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
வவுனியா பூந்தோட்டம் வீதியில் தென்னந்தோட்டத்தடி மற்றும் பூந்தோட்டம் சாந்தி, கற்குழி, தேக்கவத்தை உட்பட வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான மாவா எனப்படும் போதை கலந்த பாக்கு அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் மக்கள் குற்றதம் சுமத்துகின்றனர்.