கொழும்பு – வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.