அநுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 25 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் நெத்தலி கருவாடு, வெண்டைக்காய் மற்றும் முருங்கைக் கீரை உள்ளிட்ட உணவு வகைகளை உட்கொண்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.