முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நால்வர் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் 59 வயதுடைய நபர் ஒருவரை கடந்த 28.05.2024 அன்று முள்ளியவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் கேப்பாபிலவினை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
மாணவியின் முறைப்பாட்டுக்கமைய நேற்று (11) 16,17 மற்றும் 19 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கேப்பாபிலவினை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஜஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட மூவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அதில் இருவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன் 16 வயதுடைய பாடசாலை சிறுவனை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் உள்ள சிறுவர் நன்நடத்தை இல்லத்திற்கு அனுப்பிவைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.