யாழ்ப்பாணத்தில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவமானது நேற்று நள்ளிரவு 12:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்ட ஊடகவியலாளரான தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீதே அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் உட்பட சில பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.