நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்துள்ளார்.